ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f
பயிற்சியைச் சரியாக உள்வாங்காத சுள்ளிக் கொம்பன் பிடிக்கப்பட்ட ஐம்பது நாளுக்குப் பிறகு இரவெல்லாம் கூண்டில் அடைத்தும் பகலில் வெளியே கட்டி வைத்தும் பராமரிக்கப்பட்டது. கூண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட யானை மீண்டும் கரோலுக்குள் கொண்டு செல்ல கூடாது. ஆனால், சுள்ளிக் கொம்பன் பகலில் வெளியேவும், இரவில் கரோலிலும் இருந்ததால் யானை ஒரு வித இறுக்கமாகவே இருந்தது. இப்படியே இருந்தால் யானையை எதற்கும் பழக்கப்படுத்த முடியாது, இப்படியே தொடர்ந்தால் யானை எதற்கும் பயன்படாமல் போய் விடும் என்பதை உணர்ந்த வனத்துறை சுள்ளிக் கொம்பனை பாம்போஸ் முகாமுக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தது. அதாவது ஏப்ரல் மாதம் பிடிக்கப்பட்டு கரோலில் அடைக்கப்பட்ட சுள்ளிக் கொம்பன் அதே வருடம் நவம்பர் மாதம் 18-ம் தேதி நிரந்தரமாக வெளியே கொண்டு வரப்பட்டது. பாதுகாப்புக்கு முகாம் யானைகள் கரோலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டன.
story of making of kumki elephants episode-14